வலைத்தளங்களில் வைரலாகும் விஜய், திரிஷா புகைப்படம்.!
actor vijay and trisha photo viral in social media
வலைத்தளங்களில் வைரலாகும் விஜய், திரிஷா புகைப்படம்.!
நடிகர் விஜய்யும், திரிஷாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய் பிறந்த நாளில் அவரது தோற்றத்தையும், "நான் ரெடி" என்ற பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் அதிகளவில் கொண்டாடி வருகிறார்கள்.
![](https://img.seithipunal.com/media/vijay trisha photo-edazf.png)
இந்த நிலையில் லியோ படத்தின் கதாநாயகி த்ரிஷா காஷ்மீரில் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை விஜய், திரிஷா ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். மேலும், லியோ படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த மாதத்தில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
actor vijay and trisha photo viral in social media