பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நலத்திட்டங்களையும் சமூக சேவைகளையும் நிவாரண உதவிகளையும் செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 

இதற்கிடையே 2023-24 ஆம் ஆண்டில் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விருது வழங்கிய சிறப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட உள்ளார். மேலும் அவர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். 

இந்நிலையில் நடிகர் விஜய் தனது பெற்றோரான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகரை இன்று நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay meet his parents 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->