த.வெ.க மாநாடு எப்போது? - இன்று வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து அக்கட்சி சார்பில், இந்த இடத்தில் வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் த.வெ.க கட்சியிடம் கேட்டு இருந்தனர். இதற்கு விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது. இந்த நிலையில், த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதியை விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, இன்று காலை 11.17 மணிக்கு த.வெ.க. மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today announce tvk confrence meeting date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->