நடிகர் விக்ரமின் 'தங்கலான்': வெளியான சூப்பர் அப்டேட்!  - Seithipunal
Seithipunal


பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கோலார் தங்க சுரக்கத்தில் தமிழர்கள் பட்ட கஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையை விட ரூ. 100 கோடிக்கு மேல் செலவாகி உள்ளதாக தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

இந்த படத்தின் டீசர் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், டீசர் குறித்து 'சம்பவம் உறுதி' என கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் 'தங்கலான்' வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vikram Thangalan update released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->