மக்களின் கோரிக்கையை நொடியில் நிறைவேற்றிய பிரபல நடிகர் - Seithipunal
Seithipunal


மக்களின் கோரிக்கையை நொடியில் நிறைவேற்றிய பிரபல நடிகர்

சண்டக்கோழி, ’தாமிரபரணி’, ’பூஜை’ உள்ளிட்ட பல படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். இந்தப் படத்திற்கு ‘விஷால்34’ என்றுத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் இடைவெளியில் எம். குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷால் அவர்களை சந்தித்துள்ளனர். 

அப்போது அவர்கள், குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்ட நடிகர் விஷால் இந்தக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்தார்.

அதன்படி, நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர், M.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து கலந்தாய்வு செய்தனர்.

அதன் பின்னர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு இரண்டு பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதி செயல் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்தக் கிராம மக்கள், கேரிக்கையை உடனே நிறைவேற்றிய நடிகர் விஷாலுக்கு நன்றி கூறி பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vishal build water tank in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->