திடீர் மழை - ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷியான நடிகர் விஷால்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால், தற்போதுஇயக்குனர் ஹரியுடன் சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்திற்கு ’விஷால் 34’ என்று தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து ஹரியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விஷால் தனது எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும், ”கடைசி நாள் படப்பிடிப்பில் மழை பெய்தது. அதனை இறைவன் ஆசிர்வாதமாக கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vishal enjoy for rain come to shooting time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->