நடிகர் விஷாலுக்கு ஆப்பு? தயாரிப்பாளர் சங்கம் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


தயாரிப்பாளர் சங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியடது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு நடிகர் விஷால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், இனி வரும் காலங்களில் விஷாலை வைத்து படம் தயாரிப்பவர்கள், சங்கத்தோடு ஆலோசித்த பின் முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.விஷால் அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை
நியமித்தது.

2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி (Special Officer)-சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு Special Auditor-ரை நியமித்தார். 

அந்த Special Auditor- கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்பொழுது சங்கத்தில் இருந்த நிதியினை நிதியினை தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். 

அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.7-கோடியே 50-லட்சம், மற்றும் 2017-2019 ஆண்டுகளில் வரவு-செலவு ரூ.5-கோடியும் சேர்த்து சுமார் ரூ12-கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். 

அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்திற்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று திரு.விஷால்
பலமுறை அவர்களுக்கு தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.

ஆகவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு, ஏற்னகவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைப்படி பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் திரு.விஷால்-அவர்களை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vishal vs MPROD


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->