கே ஜி எஃப்-3.. நடிகர் யஷ் பேட்டி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
Actor Yash press meet for KGF 3
கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து. கே ஜி எஃப்இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வெளியானது.
இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ், அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது. கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதனிடையே ரசிகர்கள் இடையே 3-வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேஜிஎஃப் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும். யார், யார் நடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் யஷ் கே ஜி எஃப் மூன்றாம் பாகம் தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மூன்றாம் பாகம் தொடர்பாக நானும், பிரசாந் நீலும் நிறைய காட்சிகள் யோசித்துள்ளோம். இரண்டாம் அத்தியாயத்தில் எங்களால் செய்ய முடியாத விஷயங்கள் நிறைய உள்ளது. எனவே மூன்றாம் அத்தியாயத்திற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அப்போதே அதை விட்டு விட்டோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Actor Yash press meet for KGF 3