உச்சகட்ட கவர்ச்சி! கூச்சமா இருந்துச்சு! அந்த வெப்சீரிஸ் குறித்து மனம் திறந்த நடிகை அஞ்சலி!
Actress Anjali Say about Glamour
கற்றது தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிய நடிகை அஞ்சலி, அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
நடிகை அஞ்சலியின் யதார்த்தமான நடிப்பும், பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் தோற்றமும், அவரை தமிழில் ரசிகர்கள் இடையே விரைவில் கொண்டு சேர்த்தது.
நடிகை அஞ்சலி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி, இடையில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து, தற்போது மீண்டும் கதாநாயகியாக ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் நடிகை அஞ்சலி நடித்த தேங்க்ஸ் ஆப் கோதாவரி திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ளது. இதனை அடுத்த ஈகை என்ற தனது ஐம்பதாவது திரைப்படத்திலும் நடிகை அஞ்சலி நடிக்க வருகிறார். இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.
இது மட்டுமல்லாமல் ஜி5 ott தளத்தில், வருகின்ற 14ஆம் தேதி வெளியாக உள்ள பக்ஷிகரனா என்ற வெப் தொடரிலும் நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.
இந்த தொடரின் காட்சிகள் சிலவற்றில் நடிகை அஞ்சலி நெருக்கமாகவும், கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார். இந்த தொடரில் நடித்தது குறித்து நடிகை அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், என்னை சுற்றிலும் பல ஆண்கள் இருக்க, இப்படியான ஒரு காட்சியில் நடிப்பது எனக்கு சிரமமாக இருந்தது.
பின்னர், அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தான் படமாக்க முடிந்தது. அப்படிப்பட்ட காட்சியில் நடிக்கும் போது நான் மிகவும் கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தேன்.
இந்த வெப் சீரியஸில்ன்னோட கதாபாத்திரத்தை நியாயம் செய்துள்ளேன். நான் நடித்த எல்லா கதாபாத்திரங்களுக்கும் நினைத்ததை விட நல்ல பெயர் கிடைத்துள்ளது.
எப்போதும் போல வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தான் எனக்கு பிடித்த மாதிரி நடிகையாக என்னை மெருகேற்றும் படங்களில் தற்போது நடித்து வருகிறேன்" என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
English Summary
Actress Anjali Say about Glamour