இவர்தான் பாவனாவின் கணவரா? ஜோடி பொருத்தம் சூப்பர்.. மனசார வாழ்த்தும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை பாவனா அவருடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில வருடங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். சமீபகாலமாக அவரது கசப்பான அனுபவங்களை மறந்து அதிலிருந்து வெளியேறி சில படங்களில் நடித்து வருகின்றார். 

கன்னட சினிமாவில் பாவனா அதிகம் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக மலையாள படமொன்றில் அவர் நடிக்க இருக்கிறார். பிங் நோட் என்ற கன்னட படத்தில் தற்போது நடித்து வரும் பாவனா தொடர்ந்து மற்றொரு மலையாள படத்திலும் நடித்து இருக்கிறார். 

இதனை ஆதில் மைமூனாத் அஷ்ரப்  இயக்குகின்றார். ஷர்புதீன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சர்வைவல் என்ற ஷார்ட் பிலிம்மிலும் பாவனா நடித்திருக்கிறார். மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும், இந்த படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக பாவனா நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பாவனாவின் கணவர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதை கண்ட ரசிகர்கள், " இவர்தான் பாவனாவின் கணவரா? ஜோடி பொருத்தம் சூப்பர்." என்ற வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress bavana husband photo viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->