சென்னை அண்ணா பல்கலை, மாணவி விவகாரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது - அண்ணாமலை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2ம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு, 4ம் ஆண்டு மாணவன் ஒருவருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, இருவர் அங்கு வந்து மாணவனை தாக்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாக்க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. 

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் அதிமுக தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் மிக முக்கிய பல்கலைக் கழகத்தில் இப்படியொரு கொடூரம் நடைபெற்றுள்ளது... தனிப்பட்ட சம்பவங்கள் என்று இன்னும் எத்தனை கொடுமைகளை கடந்து செல்லப் போகிறது திமுக அரசு?

இந்த ஸ்டாலின் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லை! நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்தும், அதே மாதிரி சம்பவங்கள் நடக்கிறது என்றால், எதற்கு நிர்பயா சட்டங்கள்? மாண்புமிகு அம்மா அவர்கள் சொன்னதுபோல் Chemical Castration போன்ற உச்சகட்ட தண்டனைகளை பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai an dADMK Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->