சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் தாக்குதல்!
Chennai Anna University Girl Abused
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2ம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு, 4ம் ஆண்டு மாணவன் ஒருவருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, இருவர் அங்கு வந்து மாணவனை தாக்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியிடமும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் பல்கலைக்கழக மாணவர்களா அல்லது வெளி நபர்களா என்பது பற்றி மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Chennai Anna University Girl Abused