ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த நடிகை ஹனிரோஸ்.! வலைதங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு' மற்றும் 'கந்தர்வன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் நடித்து பிரபலமான இவர் ஆந்திராவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். 

இந்நிலையில், நடிகை ஹனிரோஸ் கேரள மாநிலத்தில் உள்ள மன்னார்காட்டில் 'மைஸி ஃபியூச்சர்' என்ற புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடையைத் திறந்து வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக சென்றார். 

இதையறிந்த, ரசிகர்கள் நடிகை ஹனிரோஸைப் பார்ப்பதற்காக கடையின் முன்பு குவிந்தனர். இதையடுத்து, நடிகை ஹனிரோஸ் கடையை திறந்துவிட்டு காரில் திரும்ப புறப்பட்டார்.

அப்போது, நடிகை ஹனிரோசுடன் செல்பி எடுப்பதற்காக ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அதன் பின்னர், அவர் பவுன்சர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் காரில் ஏறி சென்றார். 

இதைத்தொடர்ந்து, நடிகை ஹனி ரோஸ் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

மேலும், ஹனிரோஸ் ரசிகர்கள் அருகில் நிற்கும் போது கோபமாகப் பார்க்கும் நடிகைகள் போல் அல்லாமல், சிரித்து விட்டு மிக சுலபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறியது அனைவரையும் கவர்ந்து உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Haniros stuck in fans vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->