டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேரணி - 5 ஆயிரம் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு.!
case file 5 thousand farmers for rally against tungsten
மதுரை மாவட்டத்தில் உள்ள டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசயிகள் சங்கம் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி நேற்று நடை பயண பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணிக்கு மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
case file 5 thousand farmers for rally against tungsten