17 மணி நேரம் சோதனை நிறைவு...எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்..!  - Seithipunal
Seithipunal


வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது.

திமுக எம்பியும் அமைச்சர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் கடந்த 4 தேதி சோதனை நடந்தது.

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் , வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. மேலும் வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள கல்லூரியில் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 2.10 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து புறப்பட்டு சென்றனர். இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணி நேரம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 The test was completed in 17 hours Enforcement Directorate summons MP Kathir Anand 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->