மீண்டும் கர்ப்பமாக இருக்கும் கஸ்தூரி.. ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படம்.!
actress kasthuri pregnant
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஸ்தூரி. அவர் சினிமா, அரசியல், விளையாட்டு, சீரியல் என்று எல்லா தலைப்புகளையும் விட்டுவைக்காமல் விமர்சித்து வருவார்.
நிறைய விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் கஸ்தூரி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு புதிய துவக்கம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது கர்ப்பமா என்று அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் சில ரசிகர்கள் இது படத்திற்கான பிரமோஷனாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.
English Summary
actress kasthuri pregnant