காவேரி ஏன் குரல் கொடுக்கல? தமிழ்த் திரையுலகை பார்த்து கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி!
Actress Kasturi say About Cauvery issue
காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகா மாநிலத்துக்கு மின்சாரம், வணிகத்துக்காக அனுப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்” என்று நடிகை கஸ்தூரி காட்டமாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
கும்பகோணத்திற்கு ஆன்மிக சுற்றலா வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவேரி விகாரம் குறித்து அவர் தெரிவிக்கையில், "திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால், அவர்கள் காவிரி பிரச்சினையை தீர்ப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை.
காவிரி நீர் கடலை அடைந்தாள் தான், அந்த நதிக்கு ஜீவநதி. ஆங்காங்கே அணைக் கட்டினால் அந்த நதி குளம், குட்டையாகி இறுதியில் சாக்கடையாக மாறிவிடும்.
கர்நாடகாவின் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், காவிரி அவர்களுக்குத்தான் சொந்தம் என அம்மாநில மக்களை நம்ப வைத்துள்ளார்.
படித்தவர்கள் கூட காவிரியை கிருஷ்ணசாகர் அணையைக் கட்டிய விஸ்வரேஸரய்யர் தான் தோண்டி எடுத்தார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படியான ஒரு கேவலமான அரசியல் சூழ்நிலையில், வாக்கு அறுவடைக்காக செயல்படும் கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நாம் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றோம்.
ஆனால், இண்டி கூட்டணியிலுள்ள தமிழக முதல்வர், தண்ணீர் தருகிறாயா இல்லை, கூட்டணியை கலைக்கட்டுமா என ஒரு கேள்வி கேட்காமல், திரை மறைவாகச் செயல்படுவோம் என தெரிவித்து வருகிறார்.
எனவே, காவிரி நீர் பிரச்சினைக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். கர்நாடகாவை கூட பகைத்துக் கொள்ளக் கூடாது என, தமிழ்த் திரைத்துறையினர் காவிரி பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்கின்றார்களா என்ன?
குறிப்பாக காவிரிக்காக முன்பு குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ் போன்றவர்கள், தமிழக முதல்வருக்கு, போனில் தொடர்பு கொண்டால் சுலபமாக காவிரி பிரச்சனையை முடித்து விடலாம்.
ஆனால், ஏன் செய்யவில்லை? அந்த காரணமும் எனக்குத் தெரியும், ஆனால், தெரியவில்லை என்று தான் நான் கூற முடியும்.
நடிகர் சித்தார்த் கூட திமுக - காங்கிரஸ் ஆதரவாளர் தான். ஆனால், கர்நாடகாவில் அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்தக் கட்சியினர் அவரை கைவிட்டு விட்டனர்.
ஒருவேளை நடிகர் சித்தார்த் தமிழகத்துக்காகவும், காவிரிக்காகவும் குரல் கொடுத்திருந்தால், அவரின் சித்தா படத்தை தமிழர்கள் கொண்டாடியிருப்பார்கள். நடிகர் விஜய் லியோ படத்தில் அந்த வசனத்தை பேசியிருக்க கூடாது என்று தான் சொல்லுவேன்.
தமிழ் திரைத் துறையில் மத ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிளவுகள் ஏற்பட்டு வருகிறது" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
English Summary
Actress Kasturi say About Cauvery issue