இந்தி தெரியாது போயா! பெரும் திணிப்பு! ஆனால் அரசியல் சாயல் இல்லை - நடிகை கீர்த்தி சுரேஷ்! - Seithipunal
Seithipunal


இந்தி குறித்த அரசியல் சாயலும் சர்ச்சைக்குரிய கருத்து ரகுதாத்தா படத்தில் இருக்காது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவர் தற்போது இயக்குனர் சுமன் குமார் இடிந்து இயக்கி உள்ள ரகு தாத்தா திரைப்படத்தின் நடித்துள்ளார்.

ரகு தாத்தா திரைப்படத்தை ஹோம் பலே பிலிம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்திலே படத்தினுடைய டீசர் வெளியாகி பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது.

" இது எல்லாம் மீறி இந்து திணித்தே தீர்வோம் என்றால்..இந்தி தெரியாது போயா " என்ற கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்கள் பெரும் சாட்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு நிலை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கீர்த்தி சுரேஷ்  உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு படத்தைக் குறித்து அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர்.

மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்ததாவது, ரகு தாத்தா திரைப்படம் பெண்கள் மீதான திணிப்பை பற்றியதாகும். அனைத்து விதமான திணிப்பு பற்றியும் இந்த படம் பேசும். இந்தப் படத்தில் மெசேஜ் சொல்ல முயற்சி செய்து இருக்கிறோம். உபதேசம் சொல்கிற மாதிரி இருக்காது.

படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்தியை படத்தில் முயற்சி செய்திருக்கிறோம் இதில் எந்த அரசியல் சாயலும் சர்ச்சை கூறியதாகவும் எதுவும் கிடையாது. ஜாலியாக படத்தை பார்த்து செல்லும் வகையில் கதை அமைந்திருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Keerthy Suresh said that there will be no political overtones or controversial views on Hindi in Raghu thatha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->