மருத்துவமனையில் இருந்து நடிகை குஷ்பு டிஸ்சார்ஜ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையானவர் நடிகை குஷ்பு. இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்து செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

இவர் தேசிய பெண்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் குஷ்பூ சிறுவயதில் தன்னுடைய தந்தை தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இத்தகைய நிலையில் நேற்று முன்தினம் நடிகை குஷ்பூ காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு நலமுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress kushboo discharge in hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->