கணவரின் அஸ்தியை வாங்கும்போது மீனா சிரித்தாரா? சர்ச்சை வீடியோ வைரல்..!
Actress Meena Smile Husband Funeral video
பிரபல தமிழ் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா மற்றும் புறா எச்ச நுரையீரல் தொற்றால் உயிரிழந்தார். இது திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் வருத்தங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், வித்யாசாகரின் உடலை மின்மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு முன்பு, மீனா இறந்த கணவரின் உடலை கட்டியணைத்து கண்ணீர் சிந்தி வழியனுப்பி வைத்திருந்தார். இது மக்களிடையே மேலும் சோகத்தை அதிகரிக்க செய்தது. ஊடகமும் அதனை காணொளியாக பதிவு செய்து மக்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி இருந்தது.
கணவரின் அஸ்தியை வாங்க மீனா மின் மயான வளாகத்தில் காத்திருந்த நிலையில், அவரின் தோழிகளான நடிகைகள் சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோரும் இருந்தனர். அப்போது இவர்கள் மூவரும் பேசி சிரித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படும் காணொளி உண்மை தன்மையை புரியவைக்காமல் வைரலாகி வருகிறது.
English Summary
Actress Meena Smile Husband Funeral video