நஸ்ரியாவுக்கு ரொம்ப பிடிச்சது இந்த விஷயம் தானாம்.! ரசிகர்கள் ஆச்சர்யம்.!
Actress nasriya about home management
தமிழகம் மற்றும் மலையாளத்தில் வெளியாகிய நேரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை நஸ்ரியா. அடுத்ததாக ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். பின்னர், தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவரது க்யூட்டான எக்ஸ்பிரஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். இவர் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2014இல் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அவர் நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் அடுத்ததாக அடடே சுந்தரா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், நடிகை நஸ்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்ரியாவுக்கு பிடித்தது நடிப்பை விட வீட்டு நிர்வாகம் தான் என்று கூறியுள்ளார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
English Summary
Actress nasriya about home management