காதலால் ஏமாற்றப்பட்டாரா தூரிகை.? பாக்கியலட்சுமி நடிகையின் பதிவால் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய விலங்கு வெப் சீரிஸில் நடிகை ரேஷ்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே, அவர் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இத்தகைய சூழலில், நடிகை ரேஷ்மா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரும் ஆடையை மாற்றுவது போல காதலை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பெண்களை தங்களது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

தைரியமான பெண்கள் கூட இவர்களிடம் ஏமாந்து விடுகின்றனர். அப்படி ஏமாற்றப்படும் நாம் உடைந்து விடாமல் தைரியமாக யார் என்பதை வாழ்ந்து காட்ட வேண்டும். கடவுள் உங்களுடன் எப்பொழுதும் இருப்பார்." என்று தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை மிகவும் தைரியமான பெண்ணாக அனைவராலும் பார்க்கப்பட்டார். சமீபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அதை குறிப்பிடும் வகையில் பிக் பாஸ் ரேஷ்மா இந்த கருத்தை பதிவிட்டுள்ளார் என்று பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Reshma about dhoorika


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->