ரேஷ்மா குறித்து.. வெளியான பரபரப்பு தகவல்.. ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல நடிகையாக இருப்பவர் ரேஷ்மா முரளிதரன். ஜீ தமிழில் வெளியான பூவே பூச்சூடவா சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரேஷ்மா மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த சீரியலின் மூலம் அதிக ரசிகர்களை ரேஷ்மா சென்றடைந்தார்.

இதில் நடித்த மதனை ரேஷ்மா காதலித்து வந்த நிலையில் அடுத்ததாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இதில் அவரது காதலன் மதன் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

கடந்த நவம்பர் மாதத்தில் மதன் மற்றும் ரேஷ்மா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ரேஷ்மா சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றார்
 அதில் அவ்வப்போது ஏதாவது வீடியோக்களை அவர் பதிவிட்டு வைரலாக்குவது வழக்கம். 

இந்நிலையில் தற்போது ரேஷ்மா குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வெள்ளித்திரை ஹீரோயினாக ரேஷ்மா அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது தான் அந்த தகவல். இது ரேஷ்மா ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Reshma may act In Kollywood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->