சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? உண்மையை உடைத்த நடிகை சமந்தா!
Actress Samantha treatment for 25 crores
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், சிகிச்சைக்காக ரூ.25 கோடி கொடுத்ததாக தெரிவிக்கப்படும் வதந்தி தொடர்பாக நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், சமந்தாவிற்கு சிகிச்சை செலவாக ரூ.25 கோடியை வழங்கியதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகின.
நடிகை சமந்தா இந்த தகவல் குறித்தும், தற்போது தான் சிகிச்சை பெற்று வருவது குறித்தும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, ''மையோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? உங்களுக்கு யாரோ தவறான தகவலை கொடுத்துள்ளனர். நான் எனக்காக அதில் ஒரு சிறிய தொகையை செலவு செய்ததில் மகிழ்ச்சி.
நான் மற்றவர்களிடம் என் சிகிச்சைக்காக பணம் வாங்கவில்லை. நான் என் வேலைகள் மூலம் என்னுடைய துறையில் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னை நான் பார்த்துக்கொள்ள முடியும்.
மயோசிடிஸ் சிகிச்சை என்பது ஒரு நிலை. ஆயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிகிச்சை குறைத்து செய்திகள் வெளியிடும்போது சற்று கவனத்துடன் இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடன் சமந்தா தனது சிகிச்சைக்காக பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் இந்த விளக்கத்தை சமந்தா தெரிவித்துள்ளார்.
English Summary
Actress Samantha treatment for 25 crores