பிரபல நடிகையின் தாயார் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீப்ரியா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் என  நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவருடைய இயல்பான நடிப்புக்கு இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா (வயது 88) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரின் உடலை பார்த்து ஸ்ரீபிரியா இரவில் இருந்து அழுது கொண்டே இருக்கிறார். 

பிரபல பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரி சாமியின் மனைவியான கிரிஜா காதோடு தான் நான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியும், நீயா நட்சத்திரம் போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sripriya mother passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->