முல்லையை ஓரம்கட்டி, ஐஸு கொடுத்த அதிர்ச்சி.! கர்ப்பமாக இருக்கும் கண்ணன் மனைவி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார். தனக்கு எப்பொழுது குழந்தை உண்டாகும் என்று மிகுந்த ஆவலுடன் அவர் காத்துக்கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் கூட தனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது குறித்து கதிரிடம் சோகமாக அவர் தெரிவித்துக் கொண்டு இருந்தார். இத்தகைய நிலையில், தனம் மற்றும் மீனா இருவருக்கும் குழந்தை பிறந்து அடுத்ததாக முல்லைக்கு தான் குழந்தை பிறக்கும் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் நினைத்திருந்தனர். 

ஆனால், இப்பொழுது நிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது. சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்தனர். 

தற்போது ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு பின் திருமணம் நடந்த மற்றும் வயதில் சிறிய பெண்ணான ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதால் முல்லை மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதை போலவும், இவர்களது கர்ப்பத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்பது புரியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகும் காட்சிகள் வலம் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya getting pregnant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->