5 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சி ரத்து - அதிர்ச்சியில் மாணவர்கள்.!
compulsary pass exam cancelled central govt info
கடந்த 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வகுப்புவரை, மாணவர்கள் தோல்வி அடையாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்த முறை காரணமாக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் பல மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. இந்த நிலையில் ஐந்து முதல் 8 வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- 5 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வில் தோல்வி ஆக கூடாது. கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்கள் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதிலும் அவர்கள் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது.
மறுபடியும் அதே வகுப்பை தொடர வேண்டும். தேர்வில் தோல்வியடைந்தாலும், எந்த ஒரு மாணவரும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
English Summary
compulsary pass exam cancelled central govt info