பகத் சிங் போல நடிகர் அஜித்.! சர்ச்சையாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரையில் அடங்காத அஜித் குருப்ஸ் என்ற அஜித் ரசிகர்கள் அவரை புகழும் விதமாக வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு போஸ்டர் ஒன்றை அளித்துள்ளனர் அதில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்துள்ளனர் தற்போது இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith looks like bahath Singh photo


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->