சென்னை: பாலியல் புகார் அளித்த சிறுமிக்கு அரிவாள் வெட்டு!
Harassment Complaint pocso act
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர், ஒரு சிறுமியின் மீது பாலியல் குற்றம் செய்ததாகப் புகார் எழுந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுமி மீது மதன்குமாரின் சகோதரன் பாபு கொடூர தாக்குதலை நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மதன்குமாருக்கு எதிராக புகார் அளித்ததற்கே பழிவாங்கும் நோக்கில், பாபு அரிவாளுடன் தாக்குதல் நடத்தினார். சிறுமியின் முகம், கண், கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட முக்கியமான உறுப்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் அறிந்ததும், சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய பாபுவையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Harassment Complaint pocso act