தலைமுடி வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
prevent your hair from drying out
தலைமுடி வறண்டு போகாமல் இருக்க செய்ய வேண்டியவை:
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.பின் அதை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் நுனி வரை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின் ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.இந்த மாஸ்க் தலைமுடியில் விழும் சிக்கை போக்குவதோடு, தலைமுடி வறண்டு இருப்பதையும் தடுக்கும்.

தேங்காய் பால்:
தேங்காய் பாலில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. இது நல்ல கண்டிஷனராக இருப்பதோடு மட்டுமின்றி, தலைமுடிக்கான ஒரு நல்ல புரோட்டீன் சிகிச்சையாகவும் இருக்கும். அதோடு இது பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்க உதவும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு கப் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். பின் அதை வெதுவெதுப்பாக சூடேற்றி ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளியுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், தலைமுடிக்கு தேவையான சத்து கிடைத்து முடி நன்கு அடர்த்தியாக வளரும். முக்கியமாக தேங்காய் பாலை அதிகமாக சூடேற்றிவிட வேண்டாம்.
English Summary
prevent your hair from drying out