கோவிலுக்கு சென்ற ஆலியா பட்- ரன்பீர் கபூர்.! விரட்டியடித்த பக்தர்கள் கூறிய காரணம்.!  - Seithipunal
Seithipunal


ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடிப்பில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரும் பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள மகாகாலீஸ்வரர் கோவிலுக்கு ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர்  தரிசனம் செய்ய பட இயக்குனர் அயன் முக்கர்ஜியுடன் வந்திருந்தனர். பங்கஜ் தள தொண்டர்கள் கோவிலில் குவிந்து ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் தரிசனம் செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்தனர். பின் அயன் முகர்ஜி மட்டும் சாமி தரிசனம் செய்ய உள்ளே சென்றார். 

மேலும், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இது குறித்து அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, "ரன்பீர் கபூர் சில வருடங்களுக்கு முன் மாட்டிறைச்சி, சிக்கன், மட்டன் என்று எனக்கு சாப்பிட பிடிக்கும் என்று கூறினார். எனவே அவரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது. 

ஆலியா பட் தனது படத்தை வேண்டும் என்றால் பாருங்கள். இல்லை என்றால் பார்க்க வேண்டியது இல்லை என்று திமிராக பேசினார். இதனால், தான் அவர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்." என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alia batt and ranbhir kapoor not allowed to kaleeswarar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->