''பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பாலியல் தொல்லைகள் நடப்பது வழக்கமான விஷயம் தான்''; கர்நாடக உள்துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


''பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பாலியல் தொல்லைகள் நடப்பது வழக்கமான விஷயம் தான்,” என, கர்நாடக உள்துறை அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான பரமேஸ்வர் பேசியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா பெங்களூரு அருகேயுள்ள சுத்தகுண்டேபாளையாவில் கடந்த 04-ஆம் தேதி அதிகாலை 1:55 மணிக்கு, சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது; 

பெங்களூரு பெரிய நகரம். பாலியல் தொல்லை சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகின்றன. போலீசார் எவ்வளவு தான் விழிப்புடன் இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. என்ன செய்வது? இரவில் போலீசாரின் ரோந்து பணி சிறப்பாக இருக்க வேண்டும் என்று, நகர போலீஸ் கமிஷனரிடம் அடிக்கடி கூறுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு பகுதியையும் கண்காணிக்க வேண்டும் என்று, போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் பாலியல் தொல்லை சம்பவங்கள், இயல்பாகவே மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த இடத்தில் தான் பாலியல் தொல்லை நடக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும், போலீஸ் துறை சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து நாட்களும் போலீசார் வேலை செய்கின்றனர் என்றும் ரோந்து பணிகளை மேம்படுத்துவது குறித்து, போலீஸ் கமிஷனரிடம் பேசுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, அவருக்கு பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual harassment is a common occurrence in cities like Bengaluru Karnataka Home Minister controversial statement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->