காதலியை கரம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ஆல்ரவுண்டர் வீராங்கனை..!
Australian cricket team all rounder Ashley Gardner marries her girlfriend
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். நிச்சயதார்த்தம் ஆகி ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்துள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்களது திருமணம் இவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இவர்களது, திருமண விழாவில் கார்ட்னரின் நெருங்கிய கிரிக்கெட் தோழிகளான அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரி, கிம் கார்த், எலிஸ் வில்லானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர் கடந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியில் ஒருவராக டி20 தொடருக்காக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். மேலும் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாகவும் மார்ச் 13-ஆம் தேதி வரை இந்தியாவில் WPL 2025 சீசன் முழுவதும் விளையாடியுள்ளார்.

ஆல்ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், அபாரமான வலது கை பேட்ஸ்உமேன் ஆவார். அனைத்து சர்வதேச வடிவங்களிலும் 3,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள இவர், தனது வலது கை ஆப்-பிரேக் பந்துவீச்சு மூலம் 207 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அத்துடன், 2018, 2020, 2023-ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணியிலும், நியூசிலாந்தில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் ஆஷ்லே கார்ட்னர் இடம்பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Australian cricket team all rounder Ashley Gardner marries her girlfriend