" லெவல் கிராஸ் " படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகும் அமலாபால்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான அமலாபால்  லெவல் கிராஸ் என்ற மலையாள படத்தில் பாடல் ஒன்றை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். பின்னர், பிரபு சாலமனின் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பிரபலமடைந்தார். பின்னர் விஜயின் தலைவா, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்தது மூலம் பிரபலமானவர் அமலாபால்.

அமலா பாலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அமலா பால் தற்போது 9 மாத கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் பிரித்திவிராஜுடன் அமலாபால் நடித்த ஆடு ஜீவிதம் படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அமலாபால் நடித்துள்ள லெவல் கிராஸ் என்ற மலையாள படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் அமலாபால் ஒரு பாடலை பாடி பின்னணி பாடகியாக  அறிமுகம் ஆகி உள்ளார். இது குறித்து லெவல் கிராஸ் பாடத்தின் இயக்குனர் கூறும் போது, இந்த படத்தில் அமலாபால் பாடல் பாடி இருக்கிறார் அவரை வற்புறுத்தி பாட வைத்தோம் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amala Paul will debut as a singer with the movie Level Cross


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->