அமிதாப்பச்சனுடன் கலக்கும் ரஜினி - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவருடைய 170-வது படமான இந்தப் படத்தில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். 

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. 

அங்கு ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருந்த ரஜினிகாந்த், ''33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். 

என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, ரஜினி - அமிதாப் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amithap pachan and rajini photo viral in social medias


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->