6 மணிநேர காத்திருப்பு! திமுக அமைச்சர் வீட்டில் புகுந்து அமலாக்கத்துறை சோதனை!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தமிழக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன், எம்.பி. கதிர் ஆனந்தின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.  

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால், அதிகாரிகள் சோதனை தொடங்காமல் 6 மணி நேரம் காத்திருந்தனர்.

பின்னர் வேலூர் துணை மேயரின் உதவியுடன், திமுக நிர்வாகிகள் சிலரின் முன்னிலையில் சாவி கொண்டு வந்து வீட்டை திறந்து சோதனை தொடங்கப்பட்டது.  

இந்த வீடு துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இருவரும் வசிக்கும் இடமாகும். அவர்கள் சென்னையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, கதிர் ஆனந்த் மெயில் மூலம் சோதனை செய்ய அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் வீட்டில் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சோதனை குறித்து அமைச்சர் தெரிவிக்கையில், “வீட்டில் யார் வந்திருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. மொத்த தகவலும் நீங்கள் அறிந்த அளவுதான் எனக்கும் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Duraimurugan Enforcement Directorate Raid 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->