''ARRPD6'' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! வைரலாகும் போஸ்டர்.!
ARRPD6 shooting started today
இந்திய மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பல பரிமாணத்தில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ''தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்'' என்ற திரைப்படத்தின் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.
இதனை தொடர்ந்து பிரபுதேவா தலைப்பிடாத 'ARRPD6' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மனோஜ் என். எஸ் இயக்க உள்ளார்.
ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரெண்டின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக ஏ.ஆர். ரகுமான் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
ARRPD6 shooting started today