அனிருத் மீது கடும் கோபத்திலிருக்கும் அட்லி! காரணம் இதுதானா ? - Seithipunal
Seithipunal


இயக்குனர் அட்லி தற்போது  பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்று திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகி பாபு  மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த வருடம் இந்த திரைப்படத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களிடம்  மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம்  மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜூன் மாதம் ஜவான் திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த திரைப்படம்  அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் இசையமைப்பாளரான அனிருத் பின்னணி இசைக்காக சிறிது கவா கால அவகாசம் கேட்டுள்ளதால்  இத்திரைப்பட அக்டோபர் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிறைய படங்களில் அனிருத் கமிட்டாகி இருப்பதால் ஜவான் படத்தின் பணிகள் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி  தள்ளிச் சென்றதால் இயக்குனர் அட்லி  அனிருத் மீது கடும் கோபத்திலிருப்பதாக  சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டாரை வைத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததால் அட்லீ மிகுந்த அப்செட்டில்லிருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee is upset with aniruth because of this reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->