ஜேம்ஸ் பாண்ட் படபாணியில் படம்! கமல்,ரஜினி இணைத்து நடிக்க வைக்க முயற்சி! - இயக்குனர் சங்கர்! - Seithipunal
Seithipunal


மும்பை : இயக்குனர் சங்கர் ஜேம்ஸ் பாண்ட் படபாணியில் அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவை பிரம்மாண்ட பட்ஜெட் படங்களாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்குமென தெரிவித்துள்ளார்.

தமிழில் ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன் , சிவாஜி, எந்திரன் போன்ற பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் சங்கர். தற்போது இந்தியன்- 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தியன் 2 விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், மும்பையில் சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அடுத்த புதிய படங்கள் இயக்க நிறைய ஐடியாக்கள் உள்ளன. ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் படங்கள் எடுக்கும் திட்டம் உள்ளது. சரித்திர அறிவியல் படங்களும் இயக்குவேன்.

இவை பிரம்மாண்ட பட்ஜெட் படங்களாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவேன். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த படங்கள் உருவாகும்.

கமல், ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் சங்கர், இருவரையும் எந்திரன் 2.0 படத்தில் நடிக்க வைக்க முயற்சி எடுத்த நான் புது கமலஹாசன் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை.

நான் சினிமா துறைக்கு வந்தபோது இருந்த சினிமா துறையை ஒப்பிட்டால் தற்போது டெக்னாலஜி அதிகமாகிவிட்டது. அதன் மூலம் நிறைய அற்புதங்கள் செய்யலாம். நல்ல கதைகளை ரசிகர்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempt to make Kamal and Rajini act together Director Shankar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->