பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.! தீவிர சிகிச்சை மேற்க்கொள்ளும் டாக்டர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாரதிராஜாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் சளி, நீர்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

2 வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாரதிராஜா பின் பூரண குணமடைந்தார். வீடு திரும்பிய அவர் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

இத்தகைய நிலையில் பாரதிராஜாவுக்கு மறுபடியும் உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. முன்னதாக அவர் சிகிச்சை பெற்ற அமிஞ்சிக்கரையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். 

அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், பெரிய அளவில் கவலைப்படுவுமளவிற்கு எதுவும் இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baharathiraja again In hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->