6 ஹீரோயின்களை ஆசைக்கு இணங்க வைத்து, ஏமாற்றிய சைக்கோ பிரபுதேவா.?! தேதிகுறித்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் என்று பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர் பிரபுதேவா. அவரது நடனம் பலரிடமும் பாராட்டுதலைப் பெற்றது. மேலும் சில ரசிகர்கள் இவரை இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று கூட அழைப்பார்கள்.

கடந்த 1989ஆம் ஆண்டு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் நிறைய படங்களில் பிரபுதேவா நடித்துள்ளார். தற்போது, பிரபுதேவா நடிப்பில் மை டியர் பூதம் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரேக்லா, யுங் மங் சங், ஊமை விழிகள், பொய்க்கால் குதிரை, பகீரா, முசாசி உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபுதேவா கைவசம் இருக்கின்றன.

இவரது நடிப்பில் உருவாகிவரும் பகீரா திரைப்படத்தில் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால், அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி உள்ளிட்ட 6 கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்.

பல பெண்களை காதலித்து கொலை செய்யும் சைக்கோவாக பிரபுதேவா இதில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இத்தகைய நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baheera release date 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->