வெள்ளித்திரையில் நடிக்கவுள்ள பாக்கியலட்சுமி சுசித்ரா.. ஹீரோ யார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


கன்னட சினிமாவை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை சுசித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் நிறைய ரசிகர்களிடம் சுசித்ரா சென்றடைந்தார்.

தற்போது, இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு சுவாரசியமான கதை களம் சென்று கொண்டிருக்கிறது. இதில் பாக்யலட்சுமியின் கணவராக நடித்துவரும் கோபி கதாபாத்திரம் நெட்டிசன்களிடம் திட்டுவாங்கவே உருவாக்கப்பட்டது.

அடிக்கடி பாக்கியலட்சுமி கோபி குறித்து சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் வருவது வழக்கம். தற்போது டபுள் கேம் ஆடிய கோபி வசமாக சிக்கிய நிலையில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இத்தகைய சூழலில், கதா நாயகியாக நடித்து வரும் சித்ராவுக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபுதேவா நடிக்கவுள்ள இந்த புதிய படத்தில் சுசித்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi suchithra may act in prabhudeva movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->