தங்கலான், கங்குவா படங்களுக்கு தடை?.....சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Ban on Tangalan and kanguva films Chennai High Court action order
தங்கலான் மற்றும் கங்குவா படங்கள் திரையிடப்படுமா என்ற சந்தேகம், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இப்படத்தின், புரொமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் அடுத்த பாடலான அறுவடை என்ற பாடல் வெளியாகியது. இப்பாடலில் விக்ரமும் பாடியுள்ளார்.
அதேபோல், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தையும் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது. இந்நிலையில், ரிலீசுக்கு முன்பு 'தங்கலான்' மற்றும் கங்குவா படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுந்தர் தாஸ் என்பவருக்கு ஸ்டூடியோ கிரீன் செலுத்த வேண்டிய கடனில் இன்னும் 10.35 கோடி ரூபாய் மீதம் இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
தங்கலான் ரிலீசுக்கு முன்பு ரூ.1 கோடி கட்ட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீனின் மற்றொரு படமான கங்குவா ரிலீஸ் முன்பும் ரூ.1 கோடி டெபாசிட் செய்யவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் திரையிடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
English Summary
Ban on Tangalan and kanguva films Chennai High Court action order