பீஸ்ட் டிக்கெட் கட்டணம் உயர்வு., அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படம் காரணமாக, புதுச்சேரி திரையரங்குகளில் 100 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட் , இந்த பீஸ்ட் படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும்m புதுச்சேரியின் அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியது. அதன்படி,

பாக்ஸ் ரூ. 160ல் இருந்து ரூ. 260ம்,
பால்கனி ரூ. 150ல் இருந்து ரூ. 250ம், 
முதல்வகுப்பு கட்டணம் ரூ. 100ல் இருந்து ரூ.200ம்,
இரண்டாம் வகுப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 175 ம், 
3 ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.150ம் என்று ஒரு பதாகையை புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

இந்த கட்டண உயர்வை திரும்பப் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரசு தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, கட்டணத்தை உயர்த்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் திரையரங்குகளின் வட்டாரங்களிலிருந்து வெளியான தகவலின்படி, 

திரைப்படத்திற்காக 100 ரூபாய் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவது உண்மைதான். அதற்கான பதாகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. அது எப்படி சமூக வலைத்தளங்களில் வெளியாகினது என்று தெரியவில்லை என்று திரையரங்குகளின் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beast movie ticket rate hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->