#Breaking || திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் பிறந்து நாட்டுப்புற கதைகளை மையமாகக் கொண்டு படம் எடுத்து பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இவர் எப்பொழுதும் மண்வாசனை நிறைந்த திரைப்படங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இயக்குனர் ஆவார். 

இவர் ரேகா, ராதா, ராதிகா, ரஞ்சிதா, ரேவதி உள்ளிட்ட நிறைய கதாநாயகிகளை தனது திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தற்போது பாரதிராஜாவுக்கு 81 வயதாகும் நிலையில் இப்பொழுதும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், கதை ஆசிரியர் என்று தமிழ் சினிமாவில் பல்வேறு அங்கங்களாக பணியாற்றியுள்ளார். திரைத்துறை மட்டுமல்லாமல் இவரது இயக்கத்தில் சீரியல்களும் வெளியாகின. இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞராக இருக்கும் பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் தான் அவர் வீடு திரும்புவார் என்று உறவினர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathi raja admitted in Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->