''மருத்துவமனைகளில் ஹிந்துக்களை பாதுகாக்க, முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும்''; சர்ச்சையை கிளப்பிய பாஜக MLA..!
BJP MLA stirs up controversy by saying separate wards should be allocated for Muslims to protect Hindus in hospitals
அரசு மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேட்டகீ சிங் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளமை மேலும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
நிருபர்களிடம் இது குறித்து பேசிய கேட்டகீ சிங்; "ஹோலி பண்டிகை வருடத்திற்கு 1 நாள் மட்டும் தான் வருகிறது. ஆனால், வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது என சம்பல் மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தெளிவாக பேசினார். அந்த நாளில் எதாவது தவறுதலாக நடந்தால் அந்த அழுகை கும்பல் (முஸ்லிம்) தெருவில் இறங்குவார்கள்.'' என்று விமர்ச்சித்துள்ளார். அத்துடன், ''நம் மக்களை அதாவது இந்துக்களை பார்த்து இவ்வளவு பயம் இருந்தால், புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் முஸ்லிம்களுக்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும்'' என சர்ச்சையாக பேசியுள்ளார்.

அத்துடன், அவர் மேலும் பேசுகையில்; ''முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லிம்கள் பழங்களில் காய்கறிகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கலப்பது போன்ற வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.'' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பாக சம்பல் மாவட்ட சர்க்கிள் அதிகாரி பேசுகையில், "ஹோலி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை, அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை வருடத்திற்கு 52 முறை நடைபெறும். ஹோலியின் வண்ணங்களால் யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அந்த நாளில் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP MLA stirs up controversy by saying separate wards should be allocated for Muslims to protect Hindus in hospitals