பிக்பாஸ் ஷெரினுக்கு ஏற்கனவே, திருமணமாகி விட்டதா.?! அவரே வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


துள்ளுவதோ இளமை திரைப்படம் கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஷெரின். இதன்பின்னர் விசில், ஸ்டூடன்ட் நம்பர் 1, உற்சாகம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 

இதன்பின்னர் திரைத்துறைக்கே வராமல் இருந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இடம் பெற்றார். இதன்பின்னர் மக்களின் மனதில் இடம்பிடிக்க துவங்கினார். 

ஷெரின் வயதுடைய பல நடிகர்களும், நடிகைகளும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஷெரின் தற்போது திரைத்துறையில் மீண்டும் தனது அங்கீகாரத்தை நிரூபணம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கையில் உடல் பருமனுடன் இருந்த நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தை அடைந்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை ஷெரின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அந்த வகையில், ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு, "எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது நான் சாப்பாட்டை திருமணம் செய்துள்ளேன்." என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss sherin Instagram Photo viral Instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->