25 லிட்டர் பால்... ரோஜா மெத்தை,... பிரபல நடிகர் போட்ட கண்டிஷன்.! "ஆள விட்ற சாமி" என படக்குழு எஸ்கேப்.!
bjp mp and ace bojpuri actor rabi kishan shares his moments in film industry
பிரபல போஜ்புரி நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியுமான ரவி கிசன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத் தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அந்தப் பேட்டியில் சூப்பர் ஸ்டாரான பிறகு தனக்கு பெருமை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் 'கேங்க்ஸ் ஆப் வசேபூர்' திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தன்னுடைய திமிரினால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் கூறியுள்ளார்.
அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது குளிப்பதற்கு 25 லிட்டர் பால் வேண்டும் என்றும் உறங்குவதற்கு ரோஜா பூ மெத்தை வேண்டுமென்று தான் நிபந்தனை விதித்ததாகவும் அதனை ஏற்க மறுத்தப்படக் குழு தன்னை நிராகரித்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
25 லிட்டர் பாலில் தினமும் குளிப்பதும் ரோஜா பூ மெத்தையில் உறங்குவதும் தான் வழக்கமாக கடைப்பிடித்து வரும் ஒரு செயல் என்று குறிப்பிட்டவர் மக்கள் இதைக் கேட்கும் போது பெருமையாக உணர்வார்கள் என தெரிவித்தார். மும்பை போன்ற பெரிய நகரம் யாருக்குமே பித்து பிடிக்க வைக்கும் எனக் கூறியவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பின் இயல்பு நிலைக்கு வந்ததாகவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
English Summary
bjp mp and ace bojpuri actor rabi kishan shares his moments in film industry