சிவகார்த்திகேயன் கனவு பலிக்காது! அதெல்லாம் இனி வாய்ப்பே இல்லை! ப்ளூ சட்டை மாறன் கருத்து! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையான உரையாடலில், நடிகர் சிவகார்த்திகேயன் உங்கள் திரைப்பணியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அரசியல் பணி செய்யுங்கள் என்றும் மறைமுகமாக பேசுவது போன்ற வசனம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இது குறித்து பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், "நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா?

பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது.

காதல், குடும்பம், ஆக்சன், காமடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்தவர் விஜய். அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள்.

நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள். 

ஜெயிலரில் ரஜினியின் மகன் கேரக்டரில் நடிக்க கடுமையாக முயன்றீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் சிபாரிசு செய்தும்.. தலைவர் நோ சொன்னதாக தகவல். Not official.

ஒருவேளை படம் ஹிட்டானால் உங்களால்தான் ஓடியது என சொல்வார்கள் என்பதால் தலைவர் அலர்ட் ஆகி விட்டாராம்.

தலைவரை பின்பற்றினால் இந்த தலைமுறை ரசிகர்களை கவர இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள்.

நீங்கள் இதுவரை நடித்தவை காமடி படங்கள் மட்டுமே. சீரியஸ் முயற்சிகளான வேலைக்காரன், ஹீரோ போன்றவை ஓடவில்லை. 

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது. இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது" என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு சென்றாலும்.‌. சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது.

ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம்.

குட்டி தல, சின்ன தளபதி எனும் கனவு அர்த்தமற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue Sattai Maaran GOAT Vijay SK review


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->