கரூரை பதற வைத்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்! - Seithipunal
Seithipunal


கரூர் அருகே மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞர் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்: காந்திகிராம் பகுதியில் இயங்கி வரும் மெடிக்கல் ஷாப் ஒன்றில் மருந்து வாங்குவது போல் நடித்து, பெண்ணிடம் நகை பறிக்க இளைஞர் முற்பட, சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், சற்று பின்வாங்கி நகையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளவே, உடன் அந்தப் பெண் கீழே விழுகிறார். 

இதனை அடுத்து அந்த இளைஞர் தப்பி ஓடுவது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு காயம் ஏதும் இன்றி உயிர் தப்பிக்கிறார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்று சொல்லி கண்டிப்பதோடு இது போன்ற கொடூரங்கள் நின்று விடாது. 

ஒவ்வொரு மனிதருக்கும் பணத் தேவை அதிகரித்து விட்டது. 'சாராயம்' மனிதர்களின் உழைத்து பிழைக்கும் சக்தியை அபகரித்ததோடு, அந்த சாராயத்தை அருந்த எந்த அளவிற்கும் செல்லும் கோரமான கொடிய நிலை உருவாகி வருகிறது. 'உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற நிலை மாறி 'திருட்டுக்கேற்ற வருமானம்' என்கிற நிலை உருவாகி வருகிறது.

'குடி குடியை கெடுக்கும்' என்ற நிலை மாறி 'குடிக்கும் வெறி மனித குலத்தை அழிக்கும்' என்ற நிலைமைக்கு தமிழன் சென்று கொண்டிருக்கிறான் என்பதை தமிழர்களாகிய நாம் உணர வேண்டிய தருணம் இது. இந்த காட்சி நம் மனதை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நகை மீதான அந்த நபரின் குறியை பாருங்கள், கொஞ்சம் கூட எந்த பயமோ அல்லது கவலையோ இல்லாமல் சங்கிலியை பறிக்கும் வெறியை பாருங்கள்.  

கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை சமூகத்தில் கொண்டு வர வேண்டிய காலகட்டம் இது. வெறும் அரசுகளையும், காவல் துறையையும் மட்டுமே குறை சொல்லிக் கொண்டிராமல், ஒட்டு மொத்த மக்களும் ஓத்துழைப்பு நல்க வேண்டிய தருணம் இது. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக அந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அரசு இயந்திரம் முறையாக செயல்பட வேண்டும். 

இல்லையேல் சுயமரியாதை, திராவிட மாடல், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருப்பவர்களின் கண்ணெதிரிலேயே இந்த தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து போகும், சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 

தவறு செய்பவனுக்கு தண்டனை உண்டு என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டியது அரசு தான். அதனால் தான் மாநில அரசை கண்டிக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கா விட்டால் நிலைமை விபரீதமாகி விடும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur Chain Snatching CCTV video


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->